இந்திய தேசத்தின் தென் கோடியில் அமையப்பெற்றுள்ள தமிழகத்தின் தென்காசி மாவட்டம்
புளியங்குடி என்னும் நகரின் மையப் பகுதியில் 1910ம் ஆண்டு திரு ஏ.வி.ஸ்டீபன் வேதமுத்து
என்பாரால் திண்ணைப் பள்ளியாக ஒரு சில மாணவர்களுடன் துவக்கப்பட்டது இப்பள்ளி.
1919 ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேயப் பேரரசால் ஏ.வி.எஸ். துவக்கப்பள்ளியாக
(I to V Std)
இப்பள்ளி அங்கீகரிக்கப்பட்டது.
ஏழை பணக்காரர் ஜாதி இன மதம் என்று எந்த பாகுபாடுமின்றி எல்லாக்
குழந்தைகளையும் அரவணைத்து கல்வி கொடுக்கும் ஸதாபனமாக பரந்து விரிந்தது.
1965ம் ஆண்டு அப்போதைய மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் திரு காமராஜ் அவர்களால்
நடுநிலைப்பள்ளியாக
(VI to VIII Std)
தரம் உயர்த்தப்பட்டது.
1991 ம் ஆண்டு இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக
(VI to X Std)
தரம் உயர்த்தப்பட்டது.
தரம் உயர்த்தப்பட்ட நாள் முதல் தொடர்ந்து பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100
சதவீதத் தேர்ச்சியை பெற்று வருகின்றது.
2010 ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநிலத்திலேயே மூன்றாம்
இடத்தைப் பிடித்து சாதனை புரிந்தது.
தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி ஸமார்ட் வகுப்புகள் ஆங்கில மொழியில் பேசும் பயிற்சி
(Spoken English)
மற்றும் கையெழுத்துப் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு
வருகின்றது.
மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து பேச்சுக் கலை நாடகக் கலை
பாட்டுத்திறன் ஓவியம் கட்டுரைத் திறன் நடனக் கலை போன்றவைகளில் அவர்களின்
திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
விளையாட்டுகளில் மாணவர்கள் உற்சாகமாய் பங்கு பெற வாய்ப்பளிக்கப்படுகிறது.
மகளிர் எறிபந்து விளையாட்டுப் போட்டிகளில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு மாணவியர்கள்
தேசீய அளவில் வெற்றி பெற்று பல சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
மாணவர்கள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வருகை புரிந்து மனமகிழ்ச்சியோடும் மனநிறைவோடும்
முழுத் திறனோடும் திரும்பச் செய்வதே இப்பள்ளியின் அடிப்படை..
AVS High School, Puliyangudi
Correspondent
Head Master